என்ன சொல்லப் போகிறாய்!?

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

அந்த மரத்தின் மேல் நின்றபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தனர் சிவனும்.. பார்வதியும்... மரத்தின் கீழ் சோம்பலாய் கண் மூடி அமர்ந்திருந்த அழகான அவன்மேல் இருவரின் கவனமும் சென்றது.

"சுவாமி! இவனுக்கு நாம் ஏதும் வரம் தரலாமா?"

முக்காலமும் உணர்ந்த சிவன் மெல்ல சிரித்தார். "நான் வேண்டாமென்று கூறினால் நீ கேட்கவா போகிறாய்! சரி. இவனுக்கு இப்போது ஒரு சிறிய இடையூறை உண்டாக்குவோம். அவன் 'மம்மி' என்று கத்தினால் நீ தரிசனம் கொடு. 'டாடி' என்று கத்தினால் நான் தரிசனம் தருகிறேன்."

பார்வதி முகம் முழுக்க சந்தோஷத்துடன் சரியென தலையசைக்க.. மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து பையனின் தலைமேல் நச்சென்று விழுந்தது.

பையன் கத்தப்போகும் வார்த்தைக்காக சாமிகள் காத்திருக்க, தலையில் விழுந்த ஆப்பிள் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு பழம் ஏன் மரத்தின் மேலிருந்து கீழே விழுகிறது என யோசிக்க ஆரம்பித்தான் நியூட்டன்.