கவிதைகள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarksஎல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!
%%%%%%%%%%%%%%%%%%%%

மெலிதாய்
இதழ் விரிக்கத்தொடங்கி
சப்த சிரிப்புகளில்
சுத்தமாய் மறைந்திருந்தது
குவளைப்பூ போன்றதொரு
மழையின் துளியும்


%%%%%%%%%%%%%%%%%%%%

எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்
%%%%%%%%%%%%%%%%%%%%

குறிப்பார்த்து விழுந்த கல்லாக
நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்
%%%%%%%%%%%%%%%%%%%%

பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுள்ளது
தண்ணீர்
%%%%%%%%%%%%%%%%%%%%

ஒரு மழைக்கால இரவின்
ஆரம்பத்தில்
கொடுத்த முத்தம்
தீராமல்
தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது
நீ சென்ற பிறகும்
%%%%%%%%%%%%%%%%%%%%
மழையுடன் உறவாடுதல்
எளிதாகி விட்டது
அரிதாகக் கிடைத்திருக்கும்
உன் பிரிவுக்காலத்தில்
%%%%%%%%%%%%%%%%%%%%
தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்

%%%%%%%%%%%%%%%%%%%%


தமிழன் - கறுப்பியின் கவிதையில் பிடித்த ஒன்று மாத்திரம் இங்கு.. அவனிடம் கேட்காமல்...

எப்பொழுதாவது
ரசிக்கக் கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?