ர‌யிலு வ‌ண்டி

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks


நாள்: 01/10/2008 நேரம்: அதிகாலை(?!) 2:30

டிவிடியில் 'ஜானே து யா ஜானே நா'வில் ஜெனிலியா வலது கையினை தூக்கி "பப்பு கேன் டான்ஸ் சாலா.." என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த விநாடியில் ஜெனிலியாவை உறையச்செய்து விட்டு,

"மச்சி!"

"ம்"

"டேய்.."

"சொல்லேன்டா.."

"ஒண்ணு கேட்டா கோச்சுக்க மாட்டியே.."

"கண்டிப்பா கோச்சுப்பேன். ஏன்னா இது தான் கடைசி சிகரெட். இதையும் உன்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்யறது?"

"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"

"நான் உளர்றேனா. அப்ப சரி. நீயே கேக்குறத தெளிவா கேளு.."

"அது வந்து... என்னை யாரோ லவ் பண்றா மாதிரியே ஒரு ஃபீலிங்க்"

பற்ற வைக்க முயன்ற சிகரெட் வாயிலிருந்து நழுவியிருந்தது.

"இன்னாது.. உன்னைய யாரோ லவ் பண்றா மாதிரியே ஃபீலிங்கா..?"

"ஆமாம்டா"

"நீ யாரையாவ‌து ல‌வ்வு ப‌ண்ற ஃபீலிங்க்ன்னு சொல்லு ஒத்துக்க‌றேன். இங்கிலீசுல படத்துல ஹீரோயின் டைலாக்கு மாதிரி வுடுற.. இது என்ன‌ புதுசா இருக்குது? ஆமா யாரு அது.."

"மச்சி, நான் யாரையாச்சும் ல‌வ் செஞ்சேன்னு வை. அப்ப‌ நெஞ்சுல‌ க‌ல்ல‌ க‌ட்டி தூக்கிட்டு ஓடு‌றாமாதிரியே இருக்கும். அப்ப‌டி ஒரு வ‌லி இத‌ய‌த்துல‌ இருக்கும். ஆனா அதே பொண்ணு ந‌ம்ம‌ளை ல‌வ்வு ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சுட்டா த‌ண்ட‌வாள‌த்துல‌ டிரெயின் ஓடுற‌ மாதிரி மாறிடும். இப்ப‌ என் நெஞ்சுல கல் இல்லாமலேயே டிரெயின் ஓடுதுடா"

"டேய் மாப்பி! தண்டவாளம் இல்லாமத்தான் டிரெயின் ஓடாது. கல் இல்லைங்கற காரணத்துக்காகல்லாம் டிரெயின் நிக்காது. நீ இப்படி அநியாய‌த்துக்கு என்கிட்ட‌ டிராக் இழுக்க‌ற‌ப்ப‌வே நினைச்சேன். இப்ப‌டித்தான் ஏதாவ‌து முடிப்பேன்னு.. போடாங்க‌ இவ‌னே.. டிரெயின் ஓடுது.. ப‌ற‌வை ப‌ற‌க்குதுன்னு க‌தையா விடுற‌"

"டேய் ம‌ச்சி.. நான் உன்கிட்ட‌ பொய் சொல்லியிருக்கேனா.."

"அநியாய‌த்துக்கு பொய் சொல்லியிருக்க‌. அதையெல்லாம் சொல்லிட்டு இருக்க‌ இப்ப‌ நேர‌ம் இல்ல‌. என‌க்கு தூக்க‌ம் வ‌ருது."

"பார்த்தியா.. ந‌ம்ப‌ மாட்டேங்குறியே.."

"இல்லைடா மாப்பி. நீ ஏதாவ‌து ஒரு பொண்ண‌ காட்டி ல‌வ் ப‌ண்றேன்னு சொன்னா ப‌ர‌வாயில்ல‌. ந‌ம்ப‌லாம். நீ ஊர்ல‌ இருக்க‌ற‌ எல்லா பொண்ண‌யும் ல‌வ் ப‌ண்றேன்னு சொல்ற‌வ‌ன். அதான்டா என‌க்கு ப‌ய‌ம்மா இருக்குது. ஆமா உன் ஹார்ட் ஜ‌ங்க்ச‌ன்ல‌ எத்த‌னை டிராக்குல‌டா டிரெயின் ஓடிட்டு இருக்குது"

"இல்ல‌ ம‌ச்சி. இது சிங்கிள் டிராக். கூட்ஸ் டிரெயின். நிறைய்ய‌ காத‌ல‌ மாத்திர‌ம் தூக்கிட்டு சுத்திட்டு இருக்குது"

"ஆஹா! கவிஞரூ, ந‌ல்லா வ‌ண்டி எங்க‌ போகுதுன்னு போர்டை பாருடா. எங்க‌யோ போக‌வேண்டிய‌ வ‌ண்டி டிராபிக் பிர‌சினையில த‌ப்பா உன் ம‌ன‌சுல‌ ஏறியிருக்க‌ போகுது"

"ம்ஹ்ம்.. இங்க‌ எங்க‌யோ புகையுற‌ வாச‌னை வ‌ருது?"

"ஆமாம். சிக‌ரெட்ட‌ ப‌த்த‌ வ‌ச்சிட்டோமுல்ல‌.."

"இல்ல‌ ம‌ச்சான். இது வேற‌.. ஏதோ ச‌தை பொசுங்க‌றா மாதிரி?!"

"ஏன்டா என் ஈர‌ல் என்ன‌ இரும்புல‌யா செஞ்சிருக்குது. டெய்லி அடிக்குற‌ த‌ம்முல‌ உள்ள‌ ஈர‌ல் பிரையே ஆகியிருக்கும். ச‌ர‌க்கு அடிக்க‌ற‌ப்ப‌ அதையே எடுத்து சைட் டிஷ் ஆக்கிட வேண்டிய‌துதான்"

"உன‌க்கு வ‌யித்தெரிச்ச‌ல்.."

"டேய் வேணாம். வாங்கித்த‌ந்த‌ பிரியாணி செரிக்குற வ‌ரைக்கும் பேசியே கொல்வேன்னா அடுத்த‌ த‌பா ரூம்ப‌க்க‌மே த‌லைவ‌ச்சு ப‌டுக்க‌ மாட்டேன் தெரிஞ்சுக்க‌"

"ஏன் ம‌ச்சி டென்ச‌னாகுறே"

"பின்ன‌ என்ன‌டா. யாரு அந்த‌ பொண்ணுன்னு கேக்குறேன். அத‌ மாத்திர‌ம் சொல்ல‌ மாட்டேங்குற‌!? ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருந்தா ஒரு க‌ல்ல‌ தூக்கி டிரெயின் மேல‌ போட்டுட்டு நிம்ம‌தியா தூங்கு"

"அதான்டா தெரிய‌ல‌..?"

"எது"

"அதான்டா.. தண்டவாளத்துல ரயில் பயங்கர ஸ்பீடுல ஓடுதா.. அதனாலேயே அந்த‌ டிரெயின்ல‌ ஓட்டுற‌ பொண்ணு யாருன்னுதான்டா என‌க்கும் தெரிய‌ல‌."

"டேய்.. என்னை வேஸ்ட்டா கொல‌கார‌னாக்காதே"

"ச்சேய்! உன்கிட்ட‌ போய் ஃபீலிங்க்ஸா சொல்றேன் பாரு.. என்னைய‌..."

"டேய்.."

"ம்"

"டேய் மாப்பி.. கேளேன்."

"சொல்லு.."

"அந்த‌ டிரெயின் எந்த‌ ரூட்டுல‌ போகுதுன்னு கொஞ்ச‌ம் க‌வ‌னிச்சு சொல்லேன். ந‌ம்ம‌ ஏரியாப்ப‌க்க‌மா போனா ஜ‌ன்ன‌ல் வ‌ழியா எட்டிப்பார்த்து... டேய்.. டேய்.. ஏன்டா உதைக்குற‌."

"பின்ன‌ என் டிராக்குல‌ நீயும் வ‌ண்டிய‌ ஏத்துறியே"

சிறிது நேர‌த்திற்குப்பின்..

"ம‌ச்சி.. டேய் ம‌ச்சி"

"என்ன‌டா..?"

"மோச‌ம் போயிட்டேன்டா. எவ‌னோ ஒருத்த‌ன் ந‌டுவ‌ழியில‌ கைய‌ காட்டி ர‌யிலை நிறுத்தி உள்ள‌ ஏருறான்டா"

"ந‌ல்லா பார்த்தியாடா. ஆளு எப்ப‌டி இருந்தான்?"

"அவ‌னும் நிழ‌லா அவுட் ஆஃப் போக‌ஸ்லியே இருந்தான் ம‌ச்சி. ம‌ச்சி! உண்மைய‌ சொல்லு. நீ அவ‌ன் இல்லையே?"

"டேய் லூசு, உன‌க்கு வேற‌ வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவ‌து ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புற‌ம் பேச‌லாம்."

"என‌க்கு என்ன‌ தோணுது தெரியுமா?"

"என்ன?"

"பேசாம‌ தூங்கிட்டு நாளைக்கு ம‌றுப‌டி பீரை ப‌த்தி யோசிச்சா என்ன‌ன்னு தோணுது"

"போடாங்க்..வெள‌ங்காத‌வ‌னே"