காக்கா

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks
பறவைகள் அலையும் வானத்தில்
காக்காய் மாத்திரம் தனித்து தெரிகிறது
வடாம் காய விரட்டிய காக்காவை
தேடியது பக்கத்துவீட்டு ஃபிகர்
சாப்பாடு மிகுந்தால்
கா..கா.. என்று கத்த
துணை புரிந்த சிரிப்பில்
பழகிப்போன ஒரு சாயங்கால வருகையின்
ஆரம்பத்தில் கேட்டேன்
காக்காவின் பெயரென்ன
த்தூவென்று துப்பிவிட்டு உள்ளே சென்றாள்
பழகிய காகத்திற்கு
விசயம் தெரிந்து கத்திக்கொண்டுள்ளது
வானத்தின் எல்லை சென்று