வேட்டையாடு விளையாடு

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
 • Agregar a Technorati
 • Agregar a Del.icio.us
 • Agregar a DiggIt!
 • Agregar a Yahoo!
 • Agregar a Google
 • Agregar a Meneame
 • Agregar a Furl
 • Agregar a Reddit
 • Agregar a Magnolia
 • Agregar a Blinklist
 • Agregar a Blogmarks

கண்கள் திறந்து கிளம்பிய விலங்கு
சப்தமேற்படுத்தாத பாத அச்சுக்களால்
கூரிய பார்வையால்
வட்டம் போட்டு சுற்றியது
பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்
தேடித்தேடி தேடித்தேடி தேடலின் முடிவில்
கிடைத்த ஒன்றின் முதுகைத்
தொட்டு குதூகலித்த இரண்டாம் நிமிடம்
இரையான விலங்கொன்று
இரையைத் தேடிக்கிளம்பும்முன்
கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது
கண்ணாமூச்சி ரே ரே