ஏமாந்த காதல்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


எச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!


அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..


அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.


அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...


ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.


நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..


நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின் மனமும்...


ஒரு நாள் முடிவானது...


முதலில் நேரில் சந்திக்க இருப்பதால் அடையாள உடையணியும் மரபை ஏற்றுக்கொண்டார்கள்...


அவன் சிகப்புசட்டையும் வெள்ளை கால் சட்டையும்,அவள் வெள்ளை சுடிதார் - முடிவாகி கணிணி அணைந்தது...


இன்ப அதிர்ச்சியாய் அவளை மறைந்து காண விரும்பி அவன் தன் உடைத்தேர்வை மாற்றினான்.


அதேசமயம், அவளும் தன் மனதை மாற்றி வேறு உடை புகுந்தாள்..


சொல்லியிருந்த இடத்தில் காத்திருந்து காத்திருந்து பட்டுப்போனது நான்கு கண்கள்....


மறுநாள்.....


மின்னஞ்சல் முகவரி மாறியிருந்தது இருவருக்கும்... அல்லது அவனது ஜிடாக்கை தடை செய்திருந்தாள் அவள்!


ஏமாந்து போனது காதல்.......!!!


டிஸ்கி : மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)