மூன்று கவிதைகள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks

ஏவாளின் முத்தங்கள்

வெட்கக்கோலங்கள் உள்வெளிக்குறியீடுகள்
முத்தம் துறத்தலைத் தவிர்த்த
எந்தக்கேள்வியும் கேட்கவில்லை
உள்ளும் புறமும்
இரட்டை வாசல்களாய்
தனித்தனி மனதுகளில்
கதவாய் ஊசலாடுகிறேன் என்கிறாள்

*

ணிசா

நாகூராச்சி வீட்டில்
செம்பருத்திபூ
பாமா அக்காவுடன்
சேர்ந்து மல்லிகைக்குவியல்
கோதை பாட்டி
எப்போதும் கனகாம்பரக்காரி
சுவர் நீண்ட
பால்கனியில் வளர்ந்து
உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்
பவானி வீட்டில் தோட்டம் இல்லை
அவள் பார்வையை
மாத்திரம்
பறித்துவருவேன்.
என்றாலும்
ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை
பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.

*

வானம் பார்த்தவன்

குழந்தைக்குச் சொல்லும்
எல்லா வானம் தாண்டிய கதைகளிலும்
இன்னொரு வானத்தின் அடியில்
என் கதை அடங்கி விடுகிறது.
எல்லாக் கதைகளிலும்
குழந்தை மாத்திரம்
புதிய வானத்தை பார்த்து விடுகிறது