சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
விறகு விற்க
பேரம் நடந்தது
மர நிழலில்
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
சாம்பலான குடிசைகள்
அடுக்கப் பட்ட சடலங்கள்
தின்று திமிறும் சா...தீ
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
புதிய ஊர்
புரியாத மொழி
ஆறுதலாய் அதே நிலா
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
கழுத்தில் கனத்தது
ஓடிப்போன கணவனின்
தாலி
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
அன்பை போதிக்கும் மதம்
ஆயுதமேந்தி
ஆண்டவன்
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
பசிக்கும் வயிறு
சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி
அவள்
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
பாஸ்போர்ட் இல்லாமல்
இந்திய எல்லைக்குள்
வெளிநாட்டுப் பறவைகள்
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
வேகமான காற்றுக்கு
யார் சொல்வது
உதிரும் பூவின் வலி
$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$0
இதயத்தில் இன்னும்...ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் இருந்து...
ஆசிரியர்: பாலபாரதி (ச்ச்செல்லமா தல!)
தொகுப்பு & புகைப்படம் உதவி: வலைமொழி இணையப்பக்கம்